சாமை ஊத்தப்பம்

தேவையானவை:

சாமை – 100 கிராம்,
பச்சரிசி, ஜவ்வரி இரண்டும் சேர்த்து – 4 டேபிள்ஸ்பூன்,
உளுந்து – 25 கிராம்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

மேலே தூவ:

பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது),
பொடியாக நறுக்கிய கேரட்,
தக்காளி,
கொத்தமல்லித்தழை,
பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்,
பொடித்த முந்திரி – 25 கிராம்,
ஊறிய கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து வைத்துக்கொள்ளவும்).

செய்முறை:

சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லைச் சூடுசெய்து எண்ணெய் விட்டு, மாவை தடிமனாக வார்த்து மேலே தூவவேண்டிய பொருட்களைத் தூவி, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்