குளிர்காலம் தொடங்கிய நிலையில் பெட்ரோல்,டீசல் விற்பனை வீழ்ச்சி

புதுடெல்லி: நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் பெட்ரோல்,டீசல் விற்பனை குறைந்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால், குளிர் சாதனங்களின் தேவை குறைந்துள்ளதால், பெட்ரோல்,டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான 3 பொது துறை நிறுவனங்களில் பெட்ரோல் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 1.4 சதவீதம் சரிந்து 27 லட்சம் டன்னாக இருந்தது.

டீசல் தேவை 7.8 சதவீதம் குறைந்து 67 லட்சம் டன்னாக இருந்தது. சமீப காலமாக பெட்ரோல் விற்பனை குறைந்து வருகிறது. கடந்த நவம்பரில் பெட்ரோல் விற்பனை 28 லட்சம் டன்னாக இருந்தது. அதே போல் டீசல் விற்பனையும் 67 லட்சம் டன்னாக குறைந்தது. அக்டோபரில் பெட்ரோல், டீசலின் தேவை அதிகரித்தது. ஆனால் அடுத்த மாதத்தில் டீசல் நுகர்வு 7.5 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா