சேலம், திருச்சி மெட்ரோ ரயில் சேவை; இம்மாதம் இறுதியில் அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளதால் இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2வது கட்ட மெட்ரோ திட்ட பணிகள் ரூ63,246 கோடி செலவில் 3, 4, 5 என மூன்று வழித்தடங்களில் 110 கி.மீ தொலைவிற்கு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவிப்பின்படி சென்னையை போல தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்க்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வொரு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவை, மதுரையை தொடர்ந்து சேலம், திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாத்திய கூறு ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த இரு நகரங்களிலும் தலா இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகின்றன.

சேலத்தில், 40 கிலோ மீட்டருக்கும், திருச்சியில் 38 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பது குறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த பணிகள் 95% நிறைவடைந்ததை அடுத்து இம்மாதம் இறுதியில் தமிழக அரசிடம் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரையை அடுத்து சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் பணி மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே 13 சவரன் நகை, பணம் கொள்ளை..!!

ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை: காவல் ஆணையர் விளக்கம்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு..!!