சேலம் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி தீர்மானம்

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூரில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஊத்துக்கோட்டை கே.வி.லோகேஷ் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ்உதயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக் கலந்து கொண்டு, இளைஞரணி அமைப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

இதை தொடர்ந்து, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, டிசம்பர் 17ம் தேதி சேலம் இளைஞர் அணி மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் கலந்துகொள்வது, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் சிறப்பாக செயல்படும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இருசக்கர வாகன பேரணிக்கு வரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருவள்ளூர் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, முரளிதரன், சங்கர், யுவராஜ், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீஞ்சூர் இளைஞர் அணி அமைப்பாளர் க.மில்லர் நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி