சேலம் ஆயுதப்படையில் 500 துப்பாக்கிகளுக்கு சர்வீஸ்

சேலம்: தமிழ்நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை, வனத்துறை ஆகியவற்றில் பாதுகாப்புக்காக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிகள் ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யப்படும். அப்போது மூன்றில் ஒருபங்கு துப்பாக்கிகள் தான் சரிபார்க்கப்படும். அதன்படி, சேலம் மாவட்ட ஆயுதப்படையில் இன்று 500 துப்பாக்கிகளுக்கு சர்வீஸ் செய்யும் பணி நடந்தது.

இதற்காக, சென்னை சிறுப்படை கலன் எஸ்பி முருகேசன் இன்று சேலம் வந்தார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் 500 துப்பாக்கிகளை எஸ்ஐ முனியாண்டி, ஏட்டு சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை எஸ்பி முருகேசன் பார்வையிட்டு நிருபர்களிடம் கூறுகையில், ஆண்டிற்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு துப்பாக்கிகள் சரியாக இயங்குகிறதா என சரிபார்க்கப்டும். தற்போது சேலம் மாவட்டத்தில் 500 துப்பாக்கிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எஸ்ஐ முதல் ஏஎஸ்பி வரை பணியில் இருக்கும் வரை பாதுகாப்புக்காக துப்பாக்கி பயன் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி போதிய அளவில் துப்பாக்கிகள் இருக்கிறது. துப்பாக்கி ரகங்களான 303, எஸ்எல்ஆர், ஏகே 47, அதிநவீன கிளாக் 17 என அனைத்து துப்பாக்கிகளையும் பயன்படுத்த முடியும். பயன்படுத்தப்படாத துப்பாக்கிகள் திரும்பி எடுத்துக்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்ஐ வெங்கடேசன், ஏட்டுக்கள் பரமசிவம், தேவேந்திரன், போலீஸ்காரர் ரஞ்சித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்