மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் 3 வகை பால் விற்பனை: ஆவின் நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் ஆவின் நிறுவனம் மூலமாக மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்காக சமன்படுத்தப்பட்ட பால் 3.0% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள நீல நிற பாக்கெட்டுகளிலும் மற்றும் இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் 1.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளிலும் வழங்கப்படுகிறது. அதிக கொழுப்புச் சத்துள்ள பாலை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறை கொழுப்பு பால் 6.0% கொழுப்பு மற்றும் 9.0% இதரச்சத்துள்ள ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவையை கருதியும், மருத்துவ ரீதியாக ஏற்புடைய அளவில் நியாயமான விலைக்கு இவ்வகை பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!