‘கள்’ விற்பனையை தொடங்க வேண்டும்: சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானாவலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான விவாத்தில் வேளச்சேரி எம்எல்ஏ (காங்கிரஸ்) அசன் மவுலானா பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்கப்படுகிறது.

அதனால், நம் நாட்டு வெப்பநிலைக்கு ஏற்ற பானமான கள் விற்பனையை தொடங்க வேண்டும். ஆவின் பால் விற்பனைக்கு தனித்துறை அமைக்கப்பட்டது போல், கள் விற்பனைக்கும் தனியாக ஒரு துறை அமைக்க வேண்டும். மதுவிலக்கு அமல்படுத்துவது எளிதான காரியம் கிடையாது. தேசிய அளவில்தான் மதுவிலக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது