சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ வழங்கி வருகிறது. மாணவியருக்கும் ஆண்டுதோறும் மிதிவண்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 823.09 கோடி செலவில் 16,73,274 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பள்ளிகள் திறந்த உடன், மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, நடப்பு கல்வியாண்டில் சுமார் 264.10 கோடி ரூபாய் செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5,47,676 மாணவ /மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

இதன் துவக்கமாக, இன்று (20.07.2024), சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலை (மாந்தோப்பு) பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெருமக்கள், 10 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி 2024 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்டத்தினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சா.விஜயராஜ்குமார்.

இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தி.ந.வெங்கடேஷ், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் வா.சம்பத், இ.ஆ.ப., சிறுபான்மையினர் நல இயக்குநர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பெருநகர சென்னை மாநகராட்சி (தெற்கு) மண்டல துணை ஆணையர் பிரவீன்குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், சுப்பரமணி, மோகன் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை