குறைந்தளவு மீன்களே சிக்கியதால் சோகம்; நஷ்டத்துடன் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் இறால் மீன் வரத்து முற்றிலும் குறைந்ததால் பலருக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200க்கும் குறைவான விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நேற்று காலை கரை திரும்பினார். மீனவர்களின் வலையில் சில்வர் காரல், கத்தாளை, சங்காய மீன்கள் வரத்து சுமாராக இருந்தது.

அதிக விலையுள்ள இறால், நண்டு, வாவல், சீலா ஆகிய மீன்களின் வரத்து முற்றிலும் குறைந்தது. அதிகமாக விலை போகாத சங்காய மீன்களை கூடை கூடையாக மீனவர்கள் துறைமுகத்தில் விற்பனைக்கு அடுக்கி வைத்தனர். குறிப்பாக இறால் மீன் வரத்து முற்றிலும் குறைந்ததால் உள்ளூர் மக்கள் விரும்பி சாப்பிடும் டைனிங் வகை இறாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கரை திரும்பிய மீனவர்கள் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டது.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்