சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் (29 வயது, 19வது ரேங்க்) மோதிய ரைபாகினா (24வயது, 4வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதியை உறுதி செய்தார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா (26 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எம்மா நவரோவை (23 வயது, 24வது ரேங்க்) எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டியும் 1 மணி, 9 நிமிடம் மட்டுமே நீடித்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் எலினா அவனேஸ்யான் (21 வயது, 70வது ரேங்க்) உடன் மோதிய இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (28 வயது, 15வது ரேங்க்) 4-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 54 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் களமிறங்கிய ரஷ்ய நட்சத்திரம் டேனியல் மெட்வதேவ் (5வது ரேங்க்) 6-4, 2-6, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரிடம் (25 வயது, 11வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை