கம்பு பாதாம் துவையல்

தேவையானவை

கம்பு – கால் கப்
பாதாம் பருப்பு – கால் கப்
பூண்டு – 4 பல்
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிதளவு
நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – கால் கப்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கம்பு மற்றும் பாதாம் பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு அவற்றைச் சிறிது நேரம் ஆறவிட்டு, அவற்றுடன் உப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். தோசை, ரசம் சாதத்துக்கு ஏற்ற சட்னி இது. சூடான சாதத்தில் நெய் ஊற்றிப் பிசைந்து இந்தச் சட்னியைத் தொட்டுக் கொண்டால் சுவை அள்ளும்.

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்