மீண்டும் தீவிரமடையும் போர்.. ரஷ்யாவில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 4 பேர் காயமடைந்தனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை