ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைன் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது

கீவ்: ரஷ்ய-உக்ரைன் போரால் கருங்கடல் பகுதியில் தானியங்கள் ஏற்றிய சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில் உக்ரைன் கீவ் நகரில் நடந்த சர்வதேச உணவு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சனிக்கிழமை பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ‘எங்கள் ஆதரவு நாடுகள் கருங்கடலில் எங்கள் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளன.

அவ்வகையில் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது. வான் தாக்குதலை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் எங்களுக்கு தேவை’ என்றார். இம்மாத தொடக்கத்தில் உக்ரைனிலிருந்து சென்ற தானிய சரக்கு கப்பலை ரஷ்யா தாக்கியது. இந்நிலையில் மீண்டும் கருங்கடலில் உக்ரைன் தானிய சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கியுள்ளது.

Related posts

ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!

சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் ஊராட்சியில் உலக ஓசோன் தினத்தையொட்டி 1,000 பனை விதைகள் நடும் பணி

காரில் கடத்திய குட்கா பறிமுதல்: 3 பேர் கைது