கிராமச்சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகள். சென்னை பெருநகரச்சாலைப்பணிகள். திட்டங்கள் அலகு ஆகியவற்றின் பணிகளை இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: நண்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகு. தேசிய நெடுஞ்சாலை அலகு, திட்டங்கள் அலகு, சென்னை பெருநகர அலகு ஆகிய நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பணிகளையும், புதியதாக தொடங்கப்பட வேண்டிய பணிகளையும். இன்று (03.08.2021) சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையப் பயிற்சி கூட்ட ஆங்கில் ஆய்வு செய்து. அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைக மாண்புமிகு பொதுப்பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலமச்சர் அவர்கள் வழங்கினார்கள். மழைக்காலங்களில், நெடுஞ்சாலைகளில் பொது மக்கள் இடையூறு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலைகளைப் பராமரிக்க வேண்டும் என்று, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்கள்.

2786 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள 5.3.056 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்பட்டு, இதா மாவட்டச் சாலைகளாகத் தாம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 605 கிலோ மீட்டர் நீளமுடைய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.675 கோடி மதிப்பீட்டில், மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இச்சாலைகளைத் தாமுடையதாக அமைக்க வேண்டும். தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் இச்சயைகளின் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் ஏதாவது குறைபாடு இருந்தால், நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

கிராமச் சாலைகள் தாமானதாக இருக்க வேண்டும். “தரமே நாரக மந்திரம்” என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். கிராமர் சாவைகள் எங்கெல்லாம் மழைநீரால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறிந்து சாலைகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏரிகள், குளங்கள். கண்மாய்கள் ஆகியவற்றில் நீர் நிலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படும்போது. ராலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 381 பாலங்கள். ரூ.1.777 கோடி யதிப்பீட்டில் பணிகள் நடைப்பெற்று வருகிறது. 1இப்பாலங்களின் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை மூலம் 176 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதியதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கண்காணிப்புப் பொறியாளர்கள் நிலஎடுப்பு மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற்று நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள் திட்ட மதிப்பீடு சரியானதாக இருக்க வேண்டும். திருத்திய நிர்வாக அனுமதி(Revised Administrative Sanction)கோருவதை இயன்றவரை தவிர்க்க முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை பெருநகர் அலகு மூலம் சென்னையில் நடைபெறும் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட அமைச்சர் அவர்கள், கிழக்குக் கடற்கரைச் சாலை. தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை மற்றும் மத்திய கைலாஷ் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. இச்சாலைப் பணிகளின் காலதாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும். உதவிப் பொறியாளர்கள். கோட்டப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோர் திட்டச் செயல்பாடு குறித்து. ஒன்றுகூடி விவாதிக்க வேண்டும். விடுபட்ட சாலைகளைக் கண்டறிந்து அவற்றையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். 70க்கும் மேற்பட்ட பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில், திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆம்பூர் மேம்பாலங்களில் நீண்டநாட்களாக முடிக்கப்படாமல் இருப்பதால் அப்பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நம்ம சாலை செயலி” அனைவராலும் பாராட்டப்பட்டு, கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் மேலும் பாராட்டும்படி உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளமில்லா சாலைகளைப் பாரமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள் சென்னை. தஞ்சாவூர். கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் 43 இரயில்வே மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், மேம்பாலங்கள் தரமுடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

“தரமான சாலைகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும்”என்று தெரிவித்தார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஆர்.செல்வாஜ். இ.ஆ.ப. திட்ட இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., சிறப்பு அலுவலர்(டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர் மற்றும் தலைமைப்பொறியாளர்கள். கண்காணிப்புபொறியாளர்கள். கோட்டப்பொறியாபார்கள். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள். அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

இந்த ஊரில் துளசிதான் முதன்மைப்பயிர்!

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு