ரன்னே கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தி டிம் சவுத்தி சாதனை

தாகா: வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பந்துவீச்சில் 47 வருடமாக யாராலும் உடைக்க முடியாத இந்திய பந்துவீச்சாளர்களின் சாதனையை உடைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்னே கொடுக்காமல் விக்கெட் எடுப்பது என்பது அரிதிலும், அரிதான சாதனை. இதற்கு முன் இந்த சாதனையை இந்திய பந்துவீச்சாளர்கள் பாபு நட்கர்னி, மதன் லால். 1962 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாபு நட்கர்னி 6.1 ஓவர் வீசி அதில் ரன்னே கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தினார், அவர் வீசிய ஆறு ஓவர்களும் மெய்டன் ஓவர்களாக அமைந்தது.

அடுத்து 1976ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மதன் லால் அந்த காலகட்ட கிரிக்கெட் விதியின்படி ஒரு ஓவருக்கு 8 பந்துகள் கொண்ட ஓவர் கணக்கில், 4 ஓவர்கள் வீசி ரன் கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதற்கு பின் இதுவரை 47 ஆண்டுகளில் எந்த பந்துவீச்சாளராலும் ரன்னே கொடுக்காமல் விக்கெட் வீழ்த்த முடிந்ததில்லை. அந்த சாதனையை வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5.2 ஓவர்கள் வீசி ரன்னே கொடுக்காமல் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இரண்டு இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமே செய்து இருந்த சாதனையை உடைத்தார் டிம் சவுத்தி.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு