தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து பரவும் தகவல் முற்றிலும் வதந்தி: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தியே என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது என்பது 58 ஆகும். ஆனால், நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்த உள்ளதாகவும் இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாகப் பரவும் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில், ‘இது முற்றிலும் வதந்தியே, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆலோசனையும் இல்லை. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம்’ என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

Related posts

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி

ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

அனுமதியின்றி தார்க்கலவை ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு