விதிகளின்படி விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஹரிஹரன் என்பவர் மனு அளித்திருந்தார். சிலை கரைப்பு தொடர்பாக முறையான வழிகாட்டுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு