தரையில் உள்ள இலக்கை தாக்கும் ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்ரா எம்-2 ஏவுகணை, திட- உந்துதல் ஏவுகணையாகும். இது பலவகையான இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் உடையது. பல்வேறு டி.ஆர்.டி.ஓ.(பாதுகாப்புதுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் எஸ்யு-30 ரக போர் விமானத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

ருத்ரா எம்-2 ஏவுகணை சோதனை வெற்றி பாதுகாப்பு படைக்கு மிக பெரிய வலு சேர்க்கும் என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததற்கு டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்