‘ஆர்எஸ்எஸ்சில் ஒன்றிய அரசு ஊழியர்களா? ஏற்க முடியாது’

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொத்தம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: அரசு ஊழியர்கள் என்பது எந்த கட்சியும், எந்த மதமும் சாராமல் பணிபுரிய வேண்டும். ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து பணியாற்றலாம் என்பது சரியான முறை அல்ல. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மதத்தை வளர்க்கக்கூடிய சூழ்நிலையாக இருக்குமே தவிர சரியான முறை அல்ல. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யகவில்லை என்பது உண்மை தான். ஒன்றிய அரசானது தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதில் எங்களுக்கும் உடன்பாடுதான். சசிகலா உள்ளிட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார்கள். அப்படி கூறுபவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் நிலைப்பாடு தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான். இவ்வாறு கூறினார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு