ஆன்லைனில் ரேட்டிங் போட்டால் பணம் என சென்னை ஐடி ஊழியரிடம் ரூ21 லட்சம் நூதன மோசடி

சென்னை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர். சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது செல்போனிற்கு டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் எண்களில் இருந்து ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை அவர் தொட ர்பு கொண்டபோது அதில் பேசிய நபர்கள், இந்தியா முழுவதும் சுற்றுலாத்தலங்களில் உள்ள ஹோட்டல்கள் குறித்து விளம்பரங்களை பார்த்து, அவை குறித்து ஆன்லைனில் ரேட்டிங் கொடுங்கள், உங்களது ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர் கடந்த இரு மாதங்களாக தினமும் ரேட்டிங் செய்து தொகை பெற்றுள்ளார்.

அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைன் மூலம் தங்களிடம் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த வாலிபர் அந்த நபர்கள் கொடுத்த 8 வங்கி கணக்குகளுக்கு அடுத்தடுத்து ₹21 லட்சம் வரையில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் தெரிவித்ததுபோல் பல நாட்களாகியும் லாப பணம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் நெல்லை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை