சென்னை: ரூ. 11,000 கோடிக்கு சுகோய் 30 எம்கேஜ வகையைச் சேர்ந்த 12 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமானப் படைக்கான சுகோய் 30 எம்கேஜ விமானங்கள் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் சுகோய் 30 எம்கேஜ விமானங்களின் பாகங்களில் 60% இந்தியாவில் தயாரிக்கபப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.