விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று பிற்பகல் (25.7.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முருகேஸ்வரி, க/பெ.ராமச்சந்திரன் (வயது 39) மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பானு, க/பெ.சண்முகம் (வயது 39) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!