கடந்த நிதி ஆண்டில் ரூ.770 கோடியாக இருந்த மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.340.25 கோடியாக குறைந்தது: கடனுக்கான வட்டியாக ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது

சென்னை: கடந்த நிதி ஆண்டில் ரூ.770 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை, ரூ.340.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து, வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-24ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.334 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூ.770 கோடியாக இருந்தது. திருத்திய திட்ட மதிப்பீட்டில் இது ரூ.517 கோடியாக உள்ளது. சொத்து வரி உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.1680 கோடி, தொழில் வரி மூலம் ரூ.500 கோடி, முத்திரைத் தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.250 கோடி, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.850 கோடி, இதர வகையில் ரூ.822.39 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1,939.98 கோடி, நிர்வாகச் செலவு ரூ.231.72, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவு ரூ.1434.06 கோடி, கடனுக்கான வட்டி ரூ.148.82 கோடி உள்ளிட்டவை முக்கிய செலவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு காரணமாக சென்னை மாநகராட்சியின் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை