ரூ.10 நாணயம் வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்: கலெக்டர் எச்சரிக்கை

செங்கல்பட்டு: அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 நாணயத்தை வாங்கி மறுப்பது சட்டப்படி குற்றமாகும் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் ரூ.10 நாணயம் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாணயம் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் இந்த நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது.

பல கிராமங்களில் உள்ள கடைகளில் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே நாணயம் செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாணயம் அனைத்து வகையிலும் செல்லத்தக்கதே, பொதுமக்களை அலைக்கழிப்புக்கு ஆளாக்காமல் கடை உரிமையாளர்கள் இந்த நாணயத்தை அனைத்து பரிவர்த்தனைக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை