ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த ஆண்டு 6 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் கிளாசிக் 350 பாபர் மோட்டார் சைக்கிள் சந்தைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக் வடிவத்துக்கான காப்புரிமையை சமீபத்தில் பதிவு செய்துள்ளது. புதிய பைக் தோற்றம் இணைய தளங்களில் வெளியாகியிருக்கிறது. புதிய பைக் குவான் கிளாசிக் 350 என்ற பெயரில் சந்தைப் படுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. டூயல் சீட்டுகள் கொண்டதாக இருக்கும். தேவைப்பட்டால் பின் சீட்டை கழற்றிக் கொள்ளலாம். வயர் ஸ்போக் வீல்கள், வெள்ளை நிற பக்கவாட்டுடன் கூடிய டயர்கள், வட்ட வடிவ ஹெட் லேம்ப், முன்புறம் டெலஸ்கோப் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சர்வர்கள் , டூயல் சானல் ஏபிஎஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது. மேலும் இதில் 349 சிசி ஜே வரிசை இன்ஜின் இடம்பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது