பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நண்பரை கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசிய வழக்கில் கடந்த வாரம் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்திடம் கூட்டாளியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செந்தில்குமார் காணாமல்போனதாக அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். செந்தில்குமாரை கடந்த 2021ம் ஆண்டு வரிச்சூர் செல்வம் விருதுநகரிலிருந்து அழைத்து சென்றதாகவும், அவரை சென்னையில் வைத்து கொலை செய்ததாகவும் பின்னர் செந்தில்குமாரின் உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியதாகவும் வரிச்சூர் செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனடிப்படையில் நேற்று ரவுடி வரிச்சூர் செல்வதை ஆட்கடத்தல், கொலை உட்பட 9 பிரிவுகளின் கீழ் விருதுநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரவுடியை வரிச்சூர் செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டு சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இந்நிலையில் ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 23ம் தேதி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் காவல் வேண்டி மனு அளித்திருந்தனர். இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவுடி வரிச்சூர் செல்வதை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளார்.

Related posts

அசாம் வெள்ளம் – 23 லட்சம் பேர் பாதிப்பு

மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்