ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்: கன்னியாகுமரி அருகே பரபரப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவுடி செல்வத்தை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி செல்வம். ரவுடி செல்வம் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 27 குற்ற வழக்குகள் உள்ளது. இவர் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, போலீசார் இவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ரவுடி செல்வத்தை தேரூர் பகுதியில் வைத்து போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி செல்வம் தப்ப முயன்ற போது காவல் ஆய்வாளர் ஆதாம் அலி சுட்டுப்பிடித்தார். அஞ்சுகிராமம் எஸ்.ஐ.லிபி பால்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த காவலர் லிபின்பால் ராஜ், ரவுடி ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி