ரவுடி ராக்கெட் ராஜா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவு

கோவை: ரவுடி ராக்கெட் ராஜா ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராக்கெட் ராஜா திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் மும்பையில்தான் பெரும்பாலான நாள்கள் வசித்துவந்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமி துரை என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் ராக்கெட் ராஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ராக்கெட் ராஜாவை பிடிக்க போலீசார் பொறி வைத்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் ராக்கெட் ராஜாவை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே கொலை, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரபல ரவுடி ராக்கெட் ராஜா உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நெல்லை ரவுடி ராக்கெட் ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை முடிந்து ஸ்டான்லியில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் ராஜா மீது பல கொலை வழக்குகள் உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி