ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடி ஜான் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரவுடி ஜானை வழிமறித்து காரில் வந்தவர்கள் வெட்டிக்கொன்றனர். சேலத்தில் கொலை வழக்கில் ஜான் பிணையில் வெளியே வந்து கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
+
Advertisement