ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம்

ஊட்டி : இரண்டாம் சீசன் நடந்து வரும் நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டி ரோஜா பூங்காவில் நான்காயிரம் வகைகளை கொண்ட 40 ஆயிரம் செடிகள் உள்ளன. இங்கு ஹைபிரிட், மினியேச்சர் உட்பட பல்வேறு வகையான ரோஜா செடிகள் உள்ளன. இந்த ரோஜா செடிகளில் முதல் மற்றும் இரண்டாவது சீசனின் போது மலர்கள் பூத்து குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது இரண்டாம் தேசம் நடந்து வரும் நிலையில், பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன.

ஒரு சில செடிகளில் மொட்டுக்கள் காணப்படுகின்றன. தற்போது ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் உள்ள ரோஜா செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும் வகையில் நாள்தோறும் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துள்ள நிலையில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் வகையில் இயற்கை உரம் இடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்காவில் உள்ள மலர் செடிகளில் இடையே உள்ள களை செடிகள் அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!