மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளியை எம்எல்ஏ ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள சிறுதாவூர் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மேல் தளத்தின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவிகள், 1 மாணவர் உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து காயமடைந்த மாணவிகளை பார்த்து அவர்களது பெற்றோருடன் பேசி மாணவிகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புமாறும் தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் பள்ளி செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

பின்னர், எம்எல்ஏ பாலாஜி கூறுகையில், இந்த பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், தற்போது சேதம் அடைந்துள்ளதால் அதை கட்டிய ஒப்பந்ததாரர், பணியில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு ெகாண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். அதுவரை தனியாருக்கு சொந்தமான தற்காலிக கட்டிடத்தில் பள்ளி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சிறுதாவூர் ஊராட்சி தலைவர் வேதா அருள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது