செங்கல்பட்டு காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த யாஷிகா (19). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட களத்துமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்த கேசவன் (23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற யாஷிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இதனிடையே, வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி நேற்று மாலை கோயிலில் திருமணம் செய்துகொண்டு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் காதல் தம்பதியரின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்