ஆவடி அருகே தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

ஆவடி: ஆவடி அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தியா(25). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவின், தந்தை நேற்று முன்தினம் மதியம் சபரிமலைக்கு சென்றதால், அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்று, மதியம் 3.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்தியா, ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் பின்புற கதவு பூட்டப்படாமல் இருந்ததால், அவ்வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது

6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு ஏற்கக்கோரி வழக்கு: கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்