தெக்களூர் கிராமத்தில் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

திருத்தணி: தெக்களூர் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோயில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருத்தணி-பொதட்டூர்பேட்டை செல்லும் முதன்மை மாநில நெடுஞ்சாலையில் தெக்களூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஏரிக்கரை சாலையோரம் நாகாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிேஷகம் கடந்த வாரம் நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பூசாரி வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், மறுநாள் காலை கோயிலை திறக்க வந்த பூசாரி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், கோயில் வளாகத்தில் வைத்திருந்த உண்டியல் மாயமானதும் தெரியவந்தது. தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பார்வையிட்டு மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து சோதனை செய்தனர். உண்டியலில் சுமார் ரூ.. 7,000க்கும் மேல் இருக்கலாம் என தெக்களூர் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை