சாலையோர புதரில் புகுந்த பள்ளி பேருந்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தனியார் பள்ளி மினி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புதரில் பாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக காயமின்றி மாணவ, மாணவிகள் தப்பினர். செங்கல்பட்டு பழவேலி பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்தூர், வஉசி நகர், செல்வி நகர், சக்கரவர்த்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு சொந்தமான மினி பேருந்தில் ஏற்றிக்கொண்டு டிரைவர் பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது, பொன்விளைந்தகளத்தூர்-செங்கல்பட்டு சாலையில் வஉசிநகர் அருகே 8.30 மணி அளவில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், மினி பேருந்து, தாறுமாறாக ஓடி சாலையோர புதரில் பாய்ந்து நின்றது.

இதனால் பயந்துபோன மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். வானத்துக்குள் சிக்கி தவித்த 15 மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை, அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், தனியார் பள்ளி மினி பேருந்தை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், தனியார் பள்ளி மினி பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு