ரூ.390 கோடியில் சாலைகள், தெருக்கள் மேம்படுத்தப்படும்: ஊரக வளர்ச்சித்துறை தகவல்

சென்னை: ரூ.390 கோடியில் நகர்புறத்தை ஒட்டி உள்ள கிராம ஊராட்சிகளில் சாலைகள், தெருக்கள் மேம்படுத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் 2482 கிராம ஊராட்சிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.1147 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் 4,386 நூலகங்கள் ரூ.96 கோடி செலவில் கட்டப்படும். கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகள் அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலமாக வெளிப்படையாக தேர்வு செய்யப்படுவார்கள். ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம் ரூ.1,954 கோடியில் செயல்படுத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

நன்றி ரோஹித், ஜெய் ஷாவுக்காகவும் உங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்: ராகுல் டிராவிட்