சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்தது சென்னை மாநகரம்: ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் தெரியவந்துள்ளது.

சாலை விபத்து: உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்தது சென்னை

இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை சென்னை மாநகரம் அதிகளவில் குறைத்துள்ளது. விபத்துகளின் தீவிரத் தன்மை தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

சாலை விபத்துகளால் மரணம் உ.பி. முதலிடம்

நாட்டிலேயே சாலை விபத்துகளால் அதிகளவில் மரணங்கள் ஏற்படும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் சாலை விபத்துகளால் ஏற்படும் -மரணங்களின் எண்ணிக்கை உ.பி.யில் அதிகளவில் பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ல் 5,034 சாலை விபத்துகள் பதிவான நிலையில் 2022ல் சாலை விபத்து எண்ணிக்கை 3,425ஆக குறைந்துள்ளது.

“அதிவேகத்தால் அதிக உயிரிழப்புகள்”:

தேசிய நெடுஞ்சாலைகளில் 72.4% விபத்துகள் அதிவேகத்தில் சென்றதாலேயே நிகழ்ந்துள்ளன. விபத்துகளால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 75.2% அதிவேகம் காரணமாக நிகழ்ந்துள்ளன. சாலை வளைவுகள், பாலங்கள், மேடு, பள்ளங்களை விட நேரான சாலைகளிலேயே விபத்துகள் அதிகம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 67% நேரான சாலைகளிலேயே நிகழ்ந்துள்ளன. 2022-ம் ஆண்டில் சாலை விபத்துகளால் நாடு முழுவதும் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை