காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ரூ.3.63 கோடியில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி: காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை பூந்தமல்லி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில், நீண்டநாள் கோரிக்கையான சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி எம்எல்ஏவின் முயற்சியால், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவில் ஊரக சாலைகள் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்றனர். திமுக ஒன்றிய செயலாளர் கமலேஷ், பொதுகுழு உறுப்பினர் குமார், ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, ஜனார்தனன், இளையான், புககேந்தி, பாஸ்கர், வயலை பிரபாகரன், பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து, ரூ.3.63 கோடி மதிப்பில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ரவி, குமரேசன், திருமலைராஜ், சாய்மோகன், கேசவன், தணிகாசலம், சுரேஷ், ரமேஷ்பாபு, காட்டுப்பாக்கம் கிளை நிர்வாகிகள் ஸ்டாலின், பாலா, சுப்பையா, பச்சையப்பன், பந்தன், ரமேஷ், நடேசன், நடேசன், ஹரிகிருஷ்ணன், தியாகு, செந்தமிழரசன், சுபாஷ் பாபு, தமிழ்செல்வி, கள்ளியப்பன், திலீப்குமார், நித்தீஷ், குட்டி, கதிரவன், ரவிக்குமார், திருநாவுக்கரசு, ஸ்ரீரவி, மனோகர், குமார், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை