சாலைகளில் சுற்றித் திரிந்த மாடு முட்டி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடு முட்டி முதியவர் உயிரிழந்தார். ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சுற்றித் திரிந்த மாடு அவ்வழியாக சென்றவர்களை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் திருமயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (64) தலையில் அடிபட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரைக்குடி பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன்(60 வயது) என்பவர் தனது பேரனை பார்க்க ஒத்தக்கடையில் உள்ள வீட்டிற்க்கு வந்துள்ளார். முதியவர் என்பதால் கோலூன்றி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அப்பகுதியில் திரிந்து கொண்டிருந்த மாடு முதிவரை முட்டியுள்ளது.

மாடு முட்டியதில் தூக்கிவீசப்பட்ட முதியவரின் உடலில் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று முதல் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாகவும் மற்றும் காயத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாகவும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மதுரையில் 60க்கும் மேற்பட்ட மாடுகளை மாநகராட்சியின் சார்பாக கைப்பற்றப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாடுகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது என குற்றசாட்டு எழுந்துள்ளது.

Related posts

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ‘விவிபேட்’ தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

மேட்டூரில் நீர் திறப்பு 81,500 கனஅடியாக அதிகரிப்பு

கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த விவகாரம்; முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி