சாலையில் சுற்றித் திரிந்த 12 மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம்

ஆவடி:ஆவடி மாநகராட்சியில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அதை தடுக்கும் பொருட்டு, சாலையில் திரிய விடும் மாடுகளுக்கு 10,000 கன்றுக்குட்டிக்கு 5000 அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகள், திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில் உள்ள, மாட்டுத் தொழுகையில் அடைக்கப்பட்டு, அபராத தொகை கட்டிய பின், உரிமையாளர்களிடம் கால்நடைகள் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில், ஆவடி – பூந்தமல்லி பிரதான சாலை, கோவர்தனகிரி, னிவாசா நகர் மற்றும் திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில் சுற்றித்திரிந்த கன்றுக்குட்டி உட்பட 12 பசுமாடுகள் பிடித்து உரிமையாளர்களுக்கு மொத்தம் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இருந்து இதுவரை, சாலையில் சுற்றி திரிந்த 35 மாடுகள் மற்றும் 20 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதில், மாடு உரிமையாளர்களுக்கு ரூ.3.05 லட்சம் அபராதம் மற்றும் ஏலம் மூலம் ரூ.69,500 என மொத்தம் 3.74 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஆவடி பேருந்து நிலையம் அருகே, 10க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்திருந்தன. போக்குவரத்து போலீசார் அவற்றை விரட்டினர். அப்போது மிரண்டு ஓடிய மாடுகள் சாலையில் தாறுமாறாக ஓடின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து விலகி ஓடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி