ஆர்ஜேடி துணை தலைவருக்கு ஒரு ஆண்டு சிறை

பாட்னா: பீகார் அமைச்சர் சஞ்சய் குமார் ஜா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய பொது செயலாளராக இருந்தபோது, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய துணை தலைவர் சிவானந்த் திவாரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். முதல்வர் நிதிஷ் குமாருடனான தன்னுடைய அவரது நெருங்கிய உறவு குறித்து சிவானந்த திவாரி கூறிய கருத்துக்களுக்கு எதிரான இந்த வழக்கை அவர் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ,ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய துணை தலைவரான சிவானந்த் திவாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்