வத்தலக்குண்டுவில் சாலையின் நடுவிலுள்ள இரும்பு கம்பத்தால் விபத்து அபாயம்

*அகற்ற கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டுவில் சாலை நடுவில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் பகுதி சாலையின் நடுவில் முன்பு போக்குவரத்து சிக்னல் கம்பம் இருந்தது. செயல்படாமல் இருந்த அந்த சிக்னல் கம்பத்தை அறுத்து நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர்.

ஆனால் முழுவதும் அகற்றப்படாததால் சாலையின் மேல் இரும்பு கம்பம் நீட்டியபடி உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி சாலையின் நடுவில் வெளியில் நீட்டியபடி உள்ள அந்த இரும்பு கம்பத்தை அகற்ற ேகாரி நெடுஞ்சாலை துறையினரிடம் சுப்பிரமணிய சிவா நற்பணி நல சங்க ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டி மற்றும் நிர்வாரிகள் மனு கொடுத்தனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அனைவரது நலன் கருதி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்