கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசு ஏற்று வருகிறது. வருடம் தோறும் சுமார் ரூ.400 கோடி அளவில் இந்த மாணவர்களுக்கான கட்டணம் என்பது அரசு தரப்பில் இருந்து பள்ளிகளுக்கு செலுத்துப்படுகின்றன.

அதன்படி, 2024-2025-ம் கல்வியாண்டுக்கான ஆர்.டி.இ சட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கைக்கு 84,765 இடங்கள் என்பது கணக்கீடு செய்யப்பட்டது. அதில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆர்.டி.இ-க்கான பிரத்தியேக இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்களாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 1,74,756 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தொடர்ச்சியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் இந்த விண்ணப்பங்கள் எடுத்துகொள்ளப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள், ஆவணங்கள் விடுபட்ட விண்ணபங்கள் என தனிதனியாக பிரிக்கப்பட்டு இவை அணைத்து பரிசீலைக்கு உட்படுத்தப்பட்டன. இறுதியாக 1,57,767 விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக 28-ம் தேதி பள்ளிகளில் இடஒதுக்கீடு செய்யபட்டதை விட அதிகமாகவுள்ள விண்ணப்பங்கள் பெற்றோர் முன்னிலையில் குழுக்கள் முறைகள் மாணவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யபடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் செல்போன் எண்களுக்கு ஓடிபி மூலமாக அந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. ஓடிபி எண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஜூன் 3-ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

Related posts

பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உத்தரவு

தனியார் நிறுவனங்களின் சுரண்டலை தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தேசிய மருத்துவர்கள் தினம்: ஓபிஎஸ் வாழ்த்து