அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க ரூ.21 லட்சம் செலவு

மூணாறு: கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், பூப்பாறை, சூரியநெல்லி, சாந்தன்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை, கடந்த 10 ஆண்டுகளாக அரிசிக்கொம்பன் யானை அச்சுறுத்தி வந்தது. இந்த யானை கடந்த ஏப். 29ம் தேதி சின்னக்கானல் சிமென்ட் பாலம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. இதற்கு மொத்தம் ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 367 செலவாகி இருப்பதாக கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!