அரிசி விலை குறைய வாய்ப்பு: நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

புழல்: அரிசி விலை உயர வாய்ப்பில்லை என, நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அரிசி விலை உயரும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம் கூறியதாவது; ‘‘அரிசி விலையில் மாற்றம் இருக்காது. அரிசிக்கான 5 சதவீத வரியை ஒன்றிய அரசு நீக்கவேண்டும். இந்தியா 70 சதவீதம் விவசாயத்தை நம்பி இருப்பதால் இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

41 லட்சம் டன் நேரடி கொள்முதல் மாதத்துக்கு 3 லட்சம் டன் மத்திய தொகுப்பு என இருப்பு உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில இருந்து அரிசி வந்துகொண்டிருப்பதால் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்பில்லை. தக்காளிபோல் விலை உயரும் என்று சிறிதும் அச்சப்படதேவையில்லை. தற்போது அறுவடை இல்லாத நாட்கள்(ஆப் சீசன்) என்பதாலும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு என்று வருடத்திற்கு ரூ.2 முதல் 3 உயரும் நிலையில் இன்னும் சிலதினங்களில் அரிசிக்கு ரூ. 2 குறைய வாய்ப்புள்ளது.’’ இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி