காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வன சரகத்துக்குட்பட்ட பகுதியில் காண்டாமிருக கொம்பு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமயம் வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜா முகமது (54), ரவி முகமது (46), அப்துல்ரகீம் மகன் பகுருதீன் அலி (39) ஆகிய மூவரிடமிருந்து 3 காண்டாமிருக கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், 3 பேருக்கும் சட்டவிரோத விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு