ரிவோல்ட் ஆர்வி400 பிஆர்இசட்

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வி400 பிஆர்இசட் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 72 வோல்ட், 3.24 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ தூரம் வரை செல்லும். எக்கோ, நார்மல், ஸ்போர்ட் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன. இதற்கேற்ப பேட்டரி திறன் மாறுபடும். பைக்கின் வடிவமைப்பு ஏறக்குறைய முந்தைய மாடலான ஆர்வி400-ஐ போன்றே இருக்கிறது.

முன்புறம் தலைகீழ் வடிவ டெலஸ்கோப்பிக் போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. 4 விதமான பைக் இன்ஜின் சப்தத்தை விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம். சைலன்ட் மோட் தேர்வும் உள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!