இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் மக்களவையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார நிலை, 2014ல் பாஜ பதவியேற்ற பிறகு இந்தியாவின் பொருளாதார நிலை இரண்டையும் ஒப்பீடு செய்து வௌ்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கை மீது “இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய மக்கள் வாழ்க்கையில் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஐக்கிய முற்போக்கு அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. காமன்வெல்த் ஊழலால் உலகளவில் இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. ஆனால் பாஜ தலைமையிலான ஆட்சியில் ஜி20 மாநாடு உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் திணறியது. 2008 பொருளாதார நெருக்கடி கொரோனா நெருக்கடியை போன்று மிக மோசமானதாக இல்லை. அதை நேர்மையாக கையாண்டிருந்தால் நிலைமையை சமாளித்திருக்க முடியும். மிக மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். பலவீனமான பொருளாதார நாடுகளில் 5வது இடத்தில் இருந்த இந்தியா, பாஜ அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது” என்றார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு