வருவாய் அடிப்படையில் மன்னார்குடி ரயில் நிலையம் தரம் உயர்வு: பயணிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி: தெற்கு ரயில்வேயில் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 541 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆண்டு வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ரயில் நிலையங்கள் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மின்சார ரயில்கள் இயங்கும் புறநகர் ரயில் பாதைகள் எஸ்ஜி என்றும், புறநகர் அல்லாத ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி என்றும், சிறிய கிராமப்புற ரயில் நிலையங்கள் ஹெச்ஜி என தரம் பிரிக்கப்படுகிறது.

அதன்படி, புறநகர் மற்றும் கிராமப்புற ரயில் நிலையங்களுக்கு மூன்றாக தரம் பிரிக்க பட்டுள்ளது. 75 புறநகர் ரயில் நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. 113 கிராமப்புற ரயில் நிலையங்கள் உள்ளன. இதுநிங்கலாக 353 ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி தரத்தில் இடம் பெறுகின்றன. இந்த தரத்தில் உள்ள ரயில்நிலையங்கள் வருவாய் அடிப்படையில் 6 விதமாக பிரிக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று ரயில் நிலையங்களும் ஆண்டுக்கு சுமார் 500 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டும் முதல் தரத்தில் இடம் பெற்றுள்ளன.

100 கோடிக்கு மேல் 500 கோடி வரை ஆண்டு வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் தமிழகத்தில் 7 உள்ளன. அதில் குறிப்பாக கோவை, மதுரை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்கள் இடம் பெறுகின்றன. 20 கோடிக்கும் மேல் 100 கோடி வரை ஆண்டு வருவாய் ஈட்டும் தரம் 3 ரயில் நிலையங்களில் திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. 10 கோடி முதல் 20 கோடி வரை ஆண்டு வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் தரம் நான்கிலும், 1 கோடி முதல் 10 கோடி வரை ஆண்டு வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் தரம் ஐந்திலும், 1 கோடிக்கு குறைவாக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் தரம் ஆறிலும் இடம் பெறுகின்றன.

இந்நிலையில் மன்னார்குடி ரயில் நிலையம் கடந்த 2022 – 23 நிதியாண்டில் 9 கோடி வருவாய் ஈட்டி இருந்தது. 2023 – 24 நிதியாண்டில் 11.39 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.2 கோடி கூடுதல் ஆண்டு வருவாயாகும்.முன்பதிவு பயணிகள் மூலமாக 8.36 கோடியும், முன்பதிவு அல்லாத பயணிகள் மூலமாக 3.02 கோடியும் வருவாய் ஈட்டி இருக்கிறது. மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவு மூலம் 2.11 லட்சம், முன்பதிவு அல்லாமல் 2.79 லட்சம் என ஆண்டுக்கு ரூ 4.90 லட்சம் பயணிகள் ரயில்கள் முலம் பயணம் செய்கின்றனர்.

2௦22-23ம் நிதியாண்டில் மன்னார்குடி ரயில் நிலையம் ரூ.10 கோடிக்கும் குறைவான வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி தரத்தில் 5 வது இடத்தில் இடம் பெற்றது. 2023 -24 நிதியாண்டில் ரூ.11.39 கோடி வருவாய் ஈட்டிய தால் தரம் நான்கிற்கு உயர்ந்து உள்ளது. இந்த பட்டியலில் தற்போது தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது. தரம் உயர்வதால் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்து தரப்படும். அனைத்து வசதிகளும் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கும் இனி கிடைக்கும். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு