அரசு ஊழியர்களுக்கு இணையாக வணிகர்களுக்கும் ஓய்வூதிய பண பலன்: திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் கே.எஸ்.மூர்த்தி, கோவி செழியன், பழஞ்சூர் செல்வம், இணை செயலாளர்கள் மாலை ராஜா, திண்டுக்கல் வி.ஜெயன், முருகவேல், முத்துச் செல்வி, பாண்டி செல்வம், தாமரை பாரதி, துணை அமைப்பாளர்கள் வேப்பூர் பெரியசாமி, கென்னடி, வி.பி.மணி, வனராஜ், அசோக் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையாக வணிகர்களுக்கும் ஓய்வூதிய பண பலன்களும், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, குடும்பநல நிதி, காப்பீடு, பிணையில்லா கடன் போன்றவை பெறுவதற்கான வழிமுறைகளை ஒன்றிய, மாநில அரசு சட்டம் இயற்றிட வேண்டும்.

ஜிஎஸ்டியில் நடைமுறை முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களை முழுமையாக நீக்கிடவும், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களில் உள்ள வணிக விரோத சட்டங்களை நீக்கி புதிய சட்ட நடைமுறைகளை அமல்படுத்திட வேண்டும். அனைத்து தொழில், வணிக உரிமங்களையும் ஒற்றைச் சாளர முறையில் வணிகர்களுக்கு அளித்து, வணிகம் செய்வதை எளிமைப்படுத்திடவும், வணிக உரிமம் புதுப்பித்தல் 5 ஆண்டுகளுக்கு எனவும் அரசாணை வெளியிட வேண்டும். பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்ைக சீற்றங்களால் பாதிக்கப்படும் வணிகர்கள், வணிக நிறுவனங்கள், உற்பத்தியாளர்களின் பாதிப்பை ஆய்வு செய்து பாதிப்பு அளவீடு அடிப்படையின் படி இழப்பீடு வழங்க வணிகத்திற்கான காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். தமிழக வணிகர் நல வாரியத்திற்கு திமுக வர்த்தகர் அணியில் நிர்வாகிகளாக இருப்பவர்களையும் நியமித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related posts

இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இன்று மம்தா சந்திப்பு

டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு

அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி